Rock Fort Times
Online News

ரவுடி வெள்ளைக்காளிக்கு சலுகை வழங்கியதாக இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் ‘சஸ்பெண்ட்’…! 

மதுரையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி வெள்ளைக்காளி (40). இவர் மீது ஒன்பது கொலை வழக்குகள், எட்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம், கொலை வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை, மதுரை நீதிமன்றங்களில் அவரை ஆஜர்படுத்தி விட்டு பாதுகாப்புடன் போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் பெரம்பலுார் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு, சாலையோரம் உள்ள உணவகத்தில் வெள்ளைக்காளி மற்றும் போலீசார் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, கார்களில் அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல், வெள்ளைக்காளியைக் கொல்லும் நோக்கில் அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அப்போது வெள்ளைக்காளியை காப்பாற்றும் நோக்கில் தடுத்த 2 காவலர்கள் காயமடைந்தனர். அந்த கும்பலை நோக்கி போலீசார் சுட்டதால், அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தின்போது, ரவுடி வெள்ளைக்காளியுடன் அவருடைய வழக்கறிஞர் இருந்ததாகவும், அவருக்கு காவலர்கள் செல்போன் கொடுத்து உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது இதுகுறித்து சென்னை காவல் துறை சார்பில் உயரதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வெள்ளைக்காளிக்கு பாதுகாப்புக்கு சென்ற அனைத்து காவலர்களிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டது.  துறை ரீதியான விசாரணையில் 3 காவலர்கள் ரவுடி வெள்ளைக்காளியிடம் பணம் வாங்கிக்கொண்டு அவருக்கு உதவியது உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று தொடர்ந்து பலமுறை ரவுடி வெள்ளைக்காளிக்கு காவலர்கள் உதவியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திருமுருகன், செல்லதுரை, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மாரிமுத்து ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்