புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 9-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகின. 91.23 சதவீத வாக்குகள் அன்றைய தினம் பதிவானது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று( மே 4) நடைபெறுகிறது. புதுச்சேரியில் மொத்தம் 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப் படுகின்றன. இதில், தற்போதைய நிலவரப்படி
என்.ஆர்.காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
Next Post

Comments are closed.