Rock Fort Times
Online News

பொது மக்களுக்கு செய்யப்படும் போக்குவரத்து வசதிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் தலைமையில் திருச்சியில் ஆய்வு கூட்டம்…! 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட்) திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று(25-04-2026) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் அன்று வாக்களித்து விட்டு பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து வசதிகள் குறித்து போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பண்டிகை காலங்களில், தொடர் விடுமுறை காலங்களில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் பயணிகளின் நெரிசலை, தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் க.தசரதன், மதுரை கோட்ட நிர்வாக இயக்குனர் சரவணன், துணை ஆணையர் போக்குவரத்து மாதவன், தலைமை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன், திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஷ்குமார், பொது மேலாளர்கள் சிங்காரவேலன் (தொழில்நுட்பம்), ரங்கராஜன்( மனித வளம் ), வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ்பாபு (ஸ்ரீரங்கம்), சரவணபவன்( அரியலூர் ) மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்