தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சட்டமன்றத் தேர்தலில் தான் பல அதிசயங்கள் அரங்கேறியது. ஆம்.எதிர் அணியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக பக்கம் சாய்ந்தார். தேமுதிகவும் இதே நிலைப்பாட்டை தான் எடுத்தது. அதேபோல அதிமுகவில் இனி டிடிவி தினகரனுக்கு இடமில்லை என்று அடித்துச் சொன்னார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பிடித்தது. இப்படி பல்வேறு மாற்றங்கள், அதிசயங்கள் இந்த தேர்தலில் நிகழ்ந்தன. இது மட்டுமின்றி ஓ.பன்னீர்செல்வம் திமுக வேட்பாளராகவும் களம் இறக்கப்பட்டார் இத்தனை ஆண்டு காலமாக போடியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஓபிஎஸ், முதன் முறையாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். இது எந்தளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பது அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2026 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியின் வெற்றி வேட்பாளராக தன்னை தேர்வு செய்து, பரப்புரை மேற்கொண்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், எனக்காக பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், திருச்சி சிவா, வீரமணி, தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. வருகிற சட்டமன்றத் தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும். தமிழ்நாடு வெல்லும். ஒன்றாக வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.