Rock Fort Times
Online News

வாக்குப்பதிவு செய்ய சொந்த ஊர் போறீங்களா? 21, 22-ந் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் ரெடி..!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் விஜய் கட்சி முதல் முறையாக களம் காண்பதால் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே மாபெரும் எழுச்சி காணப்படுகிறது. அவர்கள் பல்வேறு ஊர்களில் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர் சென்று தங்களது வாக்கை பதிவு செய்ய வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:- பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் வருகிற 21, 22 மற்றும் 23-ந்தேதி மதியம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகள் மற்றும் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்