Rock Fort Times
Online News

தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் மாற்றம்: தேர்தல் கமிஷன் அதிரடி…!

தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 11) தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. புதிய செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமைச் செயலர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் ஆகியோர் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்