தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா இன்று(ஏப்ரல் 6 )பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல மற்றொரு திமுக எம்பி ஆன கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் திலக் பதவியேற்றுக் கொண்டார். மேலும் பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக சார்பில் மு.தம்பிதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

Comments are closed.