Rock Fort Times
Online News

திமுக கோட்டையை தாரை வார்த்து விடுவார் போலவே…* லால்குடி வேட்பாளர் பாரி வள்ளலுக்கு எதிராக குமுறும் உடன்பிறப்புகள்…!

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக த.பாரிவள்ளல் என்பவர் போட்டியிடுகிறார். இவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் ‘சித்ரா’ என்கிற பெயரில் ஓட்டலில் பங்குதாரராக உள்ளார். வேட்பாளர் பாரி வள்ளலின் குடும்பத்தினருக்கு சொந்தமான இந்த ஹோட்டலை கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞரால் திறந்து வைக்கப்பட இருந்தது. இதற்காக கருணாநிதியும் திருச்சி வந்தடைந்தார். ஆனால், அந்த ஓட்டல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால் பின்னாளில் பிரச்சனைகள் ஏற்படும் என உளவுப்பிரிவு போலீசார் கருணாநிதிக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். இதனால் சுதரித்துக்கொண்ட முதலமைச்சர் அந்த ஓட்டலை திறந்து வைக்காமலேயே சென்னை சென்று விட்டார். இதற்கெல்லாம் அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தகே.என்.நேரு தான் காரணம் என பாரிவள்ளல் நினைத்தார். இதனால் ,  அன்று முதல் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிர் நிலையிலேயே செயல்பட்டு வந்தார். 2006ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் திருச்சியை சேர்ந்த என்.செல்வராஜ் வனத்துறை அமைச்சரானார். என்.செல்வராராஜூம் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் என்பதால், என்.செல்வராஜூடன் கைகோர்த்து கொண்டு பாரிவள்ளல் செயல்பட தொடங்கினார். என்.செல்வராஜ் இறக்கும் வரை அதே நேருவுக்கு எதிர் நிலைப்பாட்டில் தான் இருந்தார். கட்சிக்காக சிங்கிள் ஒருரூபாய்கூட செலவு செய்யாதவர். செலவு செய்ய மனமில்லாதவர் இந்த பாரிவள்ளல். என்.செல்வராஜ் மறைவுக்கு பிறகு கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் கே.என்.நேருவுடன் ஒட்டிக்கொண்டார். தன்னை உலக பணக்காரர் என்கிற ரேஞ்சிக்கு சீன் போட்டு, அமைச்சர் நேருவை ஏமாற்றி திமுக தலைமையிடம் லால்குடியில் போட்டியிட ‘சீட்’ வாங்கி விட்டார். ஆனால், தற்போது தேர்தல் அடிப்படைச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் அல்லாடி வருகிறார். பலரிடம் கையேந்தி வருகிறார். கட்சிக்காக, கொள்கைக்காக உழைத்தவர்கள் எவ்வளவோ பேர் திமுகழகத்தில் இருக்க பாரிவள்ளலுக்கு எப்படி லால்குடியில் சீட் வழங்கப்பட்டது என கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் குமுறி வருகின்றனர். ஆனால், அதிமுக வேட்பாளர் ரீமாரோசோ பண பலத்துடனும், படைபலத்துடனும் தொகுதி முழுவதும் வலம் வருகிறார். பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி சென்று தொகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அவருக்கு நிகராக பாரிவள்ளல் ஒரு சதவீதம் கூட பிரச்சாரம் செய்யவில்லையே… கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கண்டு கொள்வது கூட இல்லையே… லால்குடி சட்டமன்ற தொகுதி திமுகவின் கோட்டை. கடந்த நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடி வலம் வந்த தொகுதி லால்குடி. ஆனால் அப்படிப்பட்ட திமுக கோட்டையை பாரிவள்ளல் தகர்த்து விடுவார் போல…என உடன்பிறப்புகள் ரத்தம் கொதிக்க புலம்பி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்