வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் அறிவித்தார். அவர்களில் பூந்தமல்லி வேட்பாளராக பிரகாசம் (எ) குட்டி அறிவிக்கப்பட்டார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பிரகாசம். இவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட போது தவெக பெண் நிவாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் 6 மாதங்களுக்கு முன்பே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பெண் கூறியிருக்கிறார். இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து பாலியல் சீண்டல் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து பிரகாசம் மீது திருவள்ளூர் நகர போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தவெக பெண் நிர்வாகிக்கு பதவி கொடுக்காததால் தன் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளதாக பிரகாசம் மனைவியும், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Comments are closed.