Rock Fort Times
Online News

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிகமாகவே பணி..! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும்,  தற்போதைய  முதல்வருமான விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.  இத்தகைய சூழலில் தான் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு சார்பில் வேலை வழங்கப்பட உள்ளது.
இதற்கான விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தற்போது கரூர் சென்றிருக்கிறார். இதற்கிடையே, கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(10.7.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு தற்காலிகமாக அரசு பணி வழங்கலாம்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும்  இந்த வழக்கில் சேர்க்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்