தி.மு.க.தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று( மார்ச் 31) தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் சென்ற அவர், அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை வழியாக பயணம் மேற்கொண்டார். இந்தநிலையில், தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் அருகே முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது அவரின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மையார் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் இன்று வாக்கு சேகரிக்கவுள்ளார். இன்று மாலை 5 மணியளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.

Comments are closed.