ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட் டவுனில், கம்யூனிட்டி சேர்மன் ஆக பதவி வகித்து வருபவர் எம்.சிவராஜ். இவரது மகன் சாம்ராஜ். பி.இ. மெக்கானிக்கல் முடித்துள்ள இவர், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ரூபிகா(வயது 9) பாங்காக் நகரில் உள்ள
எம்.ஐ.எஸ்.பி. பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் லக்க்ஷிதா(வயது 2) பாங்காங்கில் உள்ள ஏபிசி பத்வைஸ் பள்ளியில் ப்ரீ நர்சரி படித்து வருகிறார். படிப்பில் படு சுட்டியான இவர்கள் இருவரும் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டு சிறந்து விளங்கி வருகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையில் பாங்காக்கில் வசிக்கும் இந்தியர்களின் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில் மாணவி ரூபிகா 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அதேபோல, பாங்காக் நகரில் உள்ள ஏபிசி பத்வைஸ் பள்ளியில் பிரீ நர்சரி படிக்கும் மாணவி லக்க்ஷிதா, பள்ளி அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த சிறுமிகளை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர். மேற்கண்ட சிறுமிகள் இருவரும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட் டவுனில், கம்யூனிட்டி சேர்மன் ஆக பதவி வகித்து வரும் எம். சிவராஜின் பேத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் திருச்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடர்பு கொண்டு குழந்தைகளுக்கு தங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
.

Comments are closed.