Rock Fort Times
Online News

உங்கள் பரிந்துரைகளாலும் தேர்தல் அறிக்கை உருவாகும்…* த.வெ.க.வின் பிரத்யேக இணையதளம்..!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம்(த.வெ.க.) களம் இறங்குகிறது. ஆட்சியில் பங்கு என்ற அதிரடி அறிவிப்புடன் கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தாலும், இதுவரை த.வெ.க. கூட்டணிக்கு எந்தக் கட்சியும் இணையவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் அதிருப்தி அடையும் கட்சிகள் த.வெ.க. பக்கம் திரும்பும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அதற்கு ஒருபடி மேலே சென்று, தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 அறிவிப்புகளை இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுக்கள் அமைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களிடம் பரிந்துரைகளைப் பெற இணையதளம் இன்று (பிப்.05) மாலை 6 மணிக்கு தொடங்கியுள்ளது. த.வெ.க. வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் வருங்காலம் நீங்கள் இல்லாமல் இல்லை. மக்கள் தலைவரின் ஆட்சி உங்களுக்கானது மட்டுமல்ல; உங்கள் பரிந்துரைகளாலும் ஆனது” என்று தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் tvkmanifesto2026.com என்ற இணையதளத்தில் சென்று தங்கள் பரிந்துரைகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்