Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வாழைத்தோப்பில் ஆண் சடலம்… * கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை..!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மகேந்திரமங்கலம் காவேரி நகரில் உள்ள வாழைத்தோப்பில் சீனிவாசநல்லூர் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (60) என்பவர், இன்று (10-09-2026) சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது சொக்கலிங்கத்தின் தலையிலும், கையிலும் காயங்கள் இருந்தன. இதனால் சொக்கலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சொக்கலிங்கத்தின் மகன், தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார், சொக்கலிங்கம் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்