தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி வகுப்புகள் நடத்தி, பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு நாளில் பாராட்டு சான்றிதழ் வழங்கிட கலை பண்பாட்டு இயக்க இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் ,கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளில் பயிற்சிகள் வரும் 10.5.23ந் தேதி முதல் வரும் 19.5.23ந் தேதி வரை 10 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்பட உள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் 9436917336, 9362230042 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என திருச்சி மண்டல கலைப்பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.