திருச்சி மாவட்டம், லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிளவு ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு. பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். எனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை சுடமையாக எண்ணுகிறேன். தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா நல்லாட்சி மலர்ந்திட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அயராது பாடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.