அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஓசூரில் அமைந்துள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள எழுத்தறிவு மேம்பாட்டு மையத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். மேலும், அமெரிக்கன்- இந்தியா அறக்கட்டளை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 16 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையங்களையும் திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், கேரளாவில் அமலில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல் திட்டம்’ தமிழ்நாடு அரசு பள்ளிகளிலும் விரைவில் செயல்படுத்தப்படும். விரைவில் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
Comments are closed.