Rock Fort Times
Online News

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…!

தமிழ்நாடு அரசு சார்பில், திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு சேவைகள், நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (15.10.2026) மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை நகர் நல அலுவலர் மரு.கார்த்திகேயன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் திரளாக பங்கேற்று பயன்பெற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்