திருச்சி, கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு… * 5 ரூபாய்க்கு தயிர் அறிமுகம்!
திருச்சி, கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீரென வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், புதிய வகையான பால், ஐஸ்கிரீம் மற்றும் 5 ரூபாய் தயிர் கப் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆவின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான 500 மில்லி லிட்டர் பிரீமியம் பால் பாக்கெட், கேன்டி குச்சி ஐஸ் மற்றும் 5 ரூபாய் விலையிலான தயிர் கப் ஆகியவற்றை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் தினசரி 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் கூடுதலாக 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் இதற்கு முன்பு 1.75 லட்சம் லிட்டராக இருந்த தினசரி பால் கொள்முதல், தற்போது 1.90 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலையில், விவசாயிகளின் நலனுக்காகக் காப்பீட்டுத் திட்டத்திற்காக 1 ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகையும் பின்னர் முழுமையாக விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டு விடும் . இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.