Rock Fort Times
Online News

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: முன்ஜாமீன் கோரிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி… * காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்பில் மகேஷை 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அவர் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தநிலையில், இதுகுறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்