Rock Fort Times
Online News

மத நல்லிணக்கத்தில் முன் உதாரணமாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனை!

மத நல்லிணக்கத்திற்கு ஒரு சில தனியார் மருத்துவமனைகள் மட்டுமே முக்கியத்துவம் தருகின்றன. அதில் தனித்துவமாக திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை நோயாளிகளில் இஸ்லாமிய உறவினர்களை மற்றும் திருச்சி வாழ் இஸ்லாமிய முக்கிய பிரமுகர்களை அழைத்து இப்தார் நோன்பு நிகழ்ச்சியை நடத்தியது .அது மட்டுமல்லாது அப்பல்லோ மருத்துவமனை வளாகத்திலேயே அந்த நேரத்தில் நமாஸ் தொழுகை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்தது.இப்படி அனைவராலும் பாராட்டப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பற்றிய விபரம் வருமாறு:
திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 17 அன்று முதல்முறையாக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் A.சாமுவேல் துவக்கிவைத்து பேசினார். ரமலான் இப்தார் நிகழ்ச்சி முதல் முறையாக மருத்துவமனையில் நடப்பதாகவும் இதுபோன்ற சமூக நல்லிணக்க நிகழிச்சிகளை மருத்துவமனையில் தொடர்ந்து நடத்துவதாகவும் கூறினார். நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக திருச்சி ஆயிஷா மருத்துவமனை மருத்துவர் M.S.அஷ்ரப் , சிறப்பு விருந்தினர்களாக திருச்சி அகமது பிரதர்ஸ் ஹாஜி உமர் இக்பால் மற்றும் ஹாஜி அலி அக்பர் (இமாம்) ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை விருந்தினர் மருத்துவர் M.S. அஷ்ரப் கூறுகையில் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதால் ஆன்மா தூய்மை அடைகிறது, சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு மேம்படும், அல்லாஹ் உடனான உறவு பலப்படும் என்றார். சிறப்பு விருந்தினர் ஹாஜி அலி அக்பர் (இமாம்) கூறுகையில், மற்ற மதத்தினரையும் மதித்து அன்பு செலுத்தவேண்டும் . நோன்பு சமயத்தில் மட்டுமல்லாது எல்லா காலங்களிலும்  கடைப்பிடித்தல் அவசியம் என கூறினார். அப்போலோ மருத்துவமனை மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன் கூறுகையில் : தான் ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவன் , மேலும் ரமலான் நோன்பு புதிதல்ல. இதனில் இருக்கும் பரஸ்பர அன்பு மற்றும் சிறப்புகளை அனுபவித்ததுடன் இதனை அப்போலோ மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் முதல்முறையாக இந்நகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கூறினார். நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனை இருதய மருத்துவர் காதர்சாஹிப், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் முஹம்மது மன்சூர், மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர் சிவம், பொதுமேலாளர் சங்கீத் மற்றும் விற்பனைப்பிரிவு மூத்த மேலாளர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை உபசரித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்