பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) ஜூன் 6, 7, 9, 10, 11ம் தேதிகளிலும், மயிலாடுதுறை -செங்கோட்டை ரயிலானது (16847) 4, 8, 11 ம் தேதிகளிலும் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி. திருச்சி வழியாக இயக்கப்படும். கன்னியாகுமரி-சார்லப்பள்ளி கோடைகால சிறப்பு ரயிலானது (07229) 6ம் தேதியும், கன்னியாகுமரி – ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) 7ம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.