Rock Fort Times
Online News

ஐ.பி.எல். கிரிக்கெட்: முதல் முறையாக பெங்களூரு அணி சாம்பியன்…!

10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. இதன் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டி ( ஜூன் 3) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்தது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.சால்ட் மற்றும் கோஹ்லி துவக்கம் கொடுத்தனர். 1.4 வது ஓவரில் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து இருந்த சால்ட், ஜேமிசன் பந்தில், ஸ்ரேயாசிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.6.2 வது ஓவரில் பெங்களூரு அணி 56 ரன்கள் எடுத்து இருந்த போது 2-வது விக்கெட்டை இழந்தது. மயங்க் அகர்வால் 24 ரன்கள் எடுத்த போது, சகால் பந்துவீச்சில், அர்ஷ்தீப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். நிதானமாக விளையாடிய விராட் கோஹ்லி 43 ரன்னில் உமர்சாய் பந்தில் அவரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.கேப்டன் ரஜத் பட்டிடர் 26 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் ஜேமிசன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்கள். ஜித்தேஷ் ஷர்மா 24 ரன்னில் வியாஷ்க் பந்தில் போல்டானார்.ரொமாரியோ ஷெப்பர்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். குர்ணால் பாண்ட்யா 4 ரன்களில் வெளியேறினார்.இறுதியில் பெங்களூரு அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.பஞ்சாப் அணியின் அர்ஷ்தீ் சிங், ஜேமிசன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. பெங்களூரு அணியின் சிறப்பான பந்து வீச்சில் பி.ஆர்யா 24 ரன்னிலும், பி.சிங் 26 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள் குவித்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் வீழ்ந்தார். சிறப்பாக விளையாடிய இங்கிஷ் 39 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வதேரா 15 ரன்னிலும், ஸ்டோனிஸ் 6 ரன்னிலும், ஓமர் சாய் ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர். விக்கெட்டுகள் விழுந்தாலும் சசான்ங்(61) இறுதிவரை போராடியும் பிரயோஜனம் இல்லை. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 184 ரன்களே எடுத்ததால் பெங்களூர் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்