அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அ.தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் 2 கட்ட அமர்வுகளில் ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
