Rock Fort Times
Online News

எடமலைப்பட்டிபுதூரில் மகளுடன் தாய் மாயம்!

திருச்சி எடமலைப் பட்டிபுதூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி சரண்யா (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி ரிஸ்வந்திகா என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. சரண்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கைக்குழந்தை ரிஷ்வந்திகாவுடன் சென்ற சரண்யா வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் வெங்கடேஷ் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கேரள மாநில தொழிலாளி மாயம்

இதேபோல் கேரள மாநிலம் மெலுத்துவீடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற தச்சு தொழிலாளி கேரளாவில் இருந்து திருச்சிக்கு வந்தவர் மாயமானார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு சாரண நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்