டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை புதுடெல்லியில் மதுக் கொள்கை தொடர்பான விசாரணைக்காக நாளை சிபிஐ அலுவலகத்திற்கு வருமாறு சிபிஐ அலுவலகம் இன்று நோட்டீஸ் வழங்கியது. இது தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் தெரிவித்ததாவது:
மதுபான கொள்கையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. பொய்யான குற்றச்சாட்டில் மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எங்களுக்கு எதிராக, விசாரணை அமைப்புகள் பொய் சொல்லி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகின்றன. விசாரணையின் போது ஆம் ஆத்மி தலைவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ., என்னை அழைத்துள்ளது. நிச்சயம் செல்வேன். கெஜ்ரிவால், ஊழல்வாதி என்றால், இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. என்னை கைது செய்ய சி.பி.ஐ.க்கு பா.ஜ.க உத்தரவு பிறப்பித்தால், நிச்சயம் அதனை சி.பி.ஐ.அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
Prev Post
