அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சை கண்டித்து திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நாளை( ஏப்ரல் 22) ஆர்ப்பாட்டம்… * திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கழகப் பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்கவும், கழக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி அறிவுறுத்தலின் படியும், திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து நாளை ( 22-04-2025) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ஒத்தக்கடை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.