தமிழகம் முழுவதும், 38 ஆயிரம் கோவில்கள், அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ளன. இதில், 4,000 கோவில்கள் அதிக வருவாய் வரக்கூடியவை. இவற்றில், 234 கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் இருந்து, 5 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை சிறப்பு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுவாமியை தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், முக்கிய திருவிழா நாட்களில் தமிழகத்தில் உள்ள பிரபலமான 10 கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். அந்த கோவில்கள் விவரம் வருமாறு:-
1- மயிலாப்பூர், கபாலீசுவரர் திருக்கோயில் – மகாசிவராத்திரி
2- திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் -கந்தசஷ்டி திருவிழா நாட்கள்
3 – பழனி, தண்டாயுதபாணி
சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருநாள்
4 – ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருநாள்
5- திருத்தணி, சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் -ஆடிக்கிருத்திகை திருநாள்
6 -மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் -மீனாட்சி திருக்கல்யாணத் திருநாள்
7 – இராமேசுவரம், இராமநாதசுவாமி திருக்கோயில் அமாவாசை திருநாள், ஆடி
8 – பண்ணாரி, மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா
9 – சங்கரன்கோவில், சங்கரநாராயண
சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு திருநாள்
10 – வடலூர், திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் –

Comments are closed.