Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட் மீன் வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது…!

திருச்சி, ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா (21). இவர், காந்தி மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பாலக்கரை, உப்புபாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி சென்று கொண்டிருந்த அவரை. தர்மநாதபுரம் அருகே 4 பேர் வழிமறித்து அவரது நண்பர் குறித்து விசாரித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து சாதிக் பாட்சாவை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து பாலக்கரை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தாமஸ் அந்தோணி (24), மரியா விவியன் (22), மல்லிகை புரத்தைச் சேர்ந்த பென்னியல் (24) மற்றும் வரகனேரியைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்