Rock Fort Times
Online News

திருவெறும்பூரில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் – * அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர், ப.குமார் திறந்து வைத்தனர்!

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பொன்மலை பகுதி கழகம் சார்பில், கணேசபுரம் மெயின் ரோட்டில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் செ.செம்மலை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். . இந்நிகழ்வில் பொன்மலை பகுதி கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சூரியூர் ராஜாமணிகண்டன், பொன்மலை பகுதி ஜெ.பேரவை செயலாளர் செல்வம், பகுதி அவை தலைவர் மகாலிங்கம், பகுதி துணைச் செயலாளர் ஜான் வின்சென்ட், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பேராசிரியர் பாபு, பொன்மலை பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமார், சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் நிஜாமுதீன், மகளிர் அணி பகுதி செயலாளர் துர்கா தேவி, வட்ட பிரதிநிதி மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்