திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகர்,மாவட்ட தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல்.
மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் திறந்து வைத்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் திருச்சி காந்திமார்க்கெட் அருகே பால் பண்ணை செல்லும் வழியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு கோடை வெயிலை தணிக்கும் வகையில் மூலிகை மோர், பாணகம், தர்பூசணி, இளநீர் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர செயலாளர் டி.வி.கணேஷ், மாநில மாற்றுத்திறனாளிகள் அணி துணை செயலாளர் வாஞ்சி குமரவேல் ,மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது , பகுதி செயலாளர்கள் என்.எஸ் எம்.மணிகண்டன், அலெக்சாண்டர், அருள்ராஜ், சங்கர், ஆட்டோ கோபால், லோகராஜ், ராஜ்குமார், வட்டச் செயலாளர்கள் சரவணன்,சோலை கணேஷ்,பி கமால் , அப்பு என்கின்ற ராஜ்குமார், அண்ணாதுரை,கோட்டை முனி ,எம்.ஜி.எம்.சேட்டு, அவைத் தலைவர் பால்ராஜ், மாடசாமி ,குமார் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

