ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த் திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை இன்று நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழாவின் 9-ம் நாளான இன்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்திசேவை என்று அழைப்பர். ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். தம்பதிகளாய் பக்தர்கள் வந்து தாயாரையும் பெருமாளையும் ஒரு சேர தரிசனம் செய்தனர் ஆண்டுக்கு ஒரு முறை தான் சேர்த்து சேவை நடைபெறும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

