Rock Fort Times
Online News

பற்கள் பிடுங்கிய விவகாரம்! நெல்லை எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

நெல்லை அம்பாசமுத்திரம் சரகத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை உடைத்ததாக எழுந்த புகார் விவகாரம் ,தமிழக அரசு அளவில் பிரச்சனையை கிளப்பியது. சட்டசபையில் இது தொடர்பான கேள்வி எழுந்த போது முதல்வர் ஸ்டாலின் ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து அறிவித்தார். இது ஒரு புறம் இருக்க கலெக்டர் உத்தரவின் பேரில் பல்வீர்சிங் விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த நெல்லை எஸ்.பி சரவணன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்துள்ளது .அவருக்குப் பதிலாக தூத்துகுடி மாவட்ட எஸ்.பியான பாலாஜி சரவணன் பொறுப்பு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் பணீந்திரரெட்டி பிறப்பித்துள்ளார். இது தவிர ஏற்கனவே கல்லிடைக்குறிச்சி காவல் சரகத்தில் உள்ள 6 போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்