சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் தருமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்தகோவிலில் பங்குனித் திருவிழா நடந்து வருகிறது .இதன் ஒரு பகுதியாக இன்று தீர்த்தவாரி நடந்தது. சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்வு நடந்தது. அப்போது 25க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர். எதிர்பாராத விதமாக அர்ச்சகர் ஒருவர் குளத்தில் மூழ்கி தத்தளித்தார். அதனைக் கண்ட மற்ற அர்ச்சகர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது அடுத்தடுத்து நீரில் மூழ்கி மொத்தம் 5 அர்ச்சகர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நங்கநல்லூரை மட்டுமல்லாது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
