Rock Fort Times
Online News

வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மலர் தூவி மரியாதை

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (2 ஏப்ரல் 1881–4 ஜூன் 1925)இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் திருச்சியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ்ச் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு அரசு அவரது நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் வரகனேரி, அக்ரஹாரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கியது.இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி வரகனேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வ.வே.சுப்ரமணிய அய்யர்திரு உருவப்படத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்