Rock Fort Times
Online News

விஜயை வைத்து திரைப்படங்கள் தயாரித்த அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு பதவி…!

முதல்வர் விஜய்யை வைத்து பிகில், கோட் போன்ற படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி, அறங்காவலர் நியமனக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆண்டுக்கு 10 லட்ச ரூபாயுக்கும் மேல் வருவாய் உள்ள கோயில்களுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களை அழைத்து அறங்காவலரை நியமிக்க 7 பேர் கொண்ட குழுவை அறநிலையத்துறை நியமித்திருக்கிறது. அந்த 7 பேரில் அர்ச்சனா கல்பாத்தியும் ஒருவர். அவருக்கு இந்த குழுவின் உறுப்பினர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமத்தை சேர்ந்தவர். முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது 2019ல் பிகில் படத்தையும், 2024ல் கோட் என்கிற படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏற்கெனவே ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு டெல்லி பிரதிநிதி பதவியும், ஆன்லைன் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குருவுக்கு தகவல் சரிபார்ப்புக் குழுவின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்