Rock Fort Times
Online News

தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி திருச்சியில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்…!* 500க்கும் மேற்பட்டோர் கைது!

தொழிலாளர் விரோத சட்டங்களை முற்றிலுமாக ரத்துசெய்ய வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சி, தெப்பக்குளம் தபால் நிலையத்திலிருந்து 600க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று சிங்காரத்தோப்பு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்