Rock Fort Times
Online News

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா!

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்களுக்கான ” பில்ட் நேஷன் அவார்டு ” என்கிற விருது வழங்கும் விழா, திருச்சி மேலப்புதூரில் உள்ள. ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் ஆர்.ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ஜமால் முகமது கல்லூரி முதல்வர் டி.ஐ ஜார்ஜ் அமலரத்தினம் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.பிரதீபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 25 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார்.அப்போது அவர் பேசும் போது., ரோட்டரி சங்கங்கள் சார்பில் பல்வேறு சமூக மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கல்வி சார்ந்த சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறோம். மிகச் சமீபத்தில் கூட அரசுப்பள்ளிகளுக்கு சுமார் 50 கழிவறைகளை கட்டிக்கொடுத்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தன்னலமின்றி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ரோட்டரி சங்கங்களின் சார்பில் வழங்கப்படும் விருது வழங்கும் விழாவில் நான் கலந்துகொண்டது உள்ளபடியே மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.  உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.  ஜோசப் கண்மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா பேசும்போது.,  திருச்சி ஜோசப் கண்மருத்துவமனை மருத்துவத்தில் மட்டுமல்ல, இதுபோன்ற சமூகப்பணிகளிலும் சிறப்பாக பங்கெடுத்து வருகிறது.இம்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஜோசப் ஞானதிக்கம் அப்போதே ரோட்டரி சங்கத்தில் இணைந்து பல பணிகளை செய்துள்ளார்.ஆசிரியர்களான உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள் என்றார்.  ரோட்டரி சங்க மாநில செயலாளர் மின்னல் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் ரோட்டரி கிளப் ஆஃப் போர்ட், ரோட்டரி கிளப் ஆஃப் டைமண்ட் சிட்டி, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி சிட்டி, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ஹனீ பீஸ், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி நெக்ஸ்ட் ஜென், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ஐ டொனேஷன், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி தென்றல் உள்ளிட்ட ரோட்டரி கிளப்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஜமால் முகமது கல்லூரியின் தேசிய மாணவர்ப்படை மாணவர்கள் உள்ளிட் பலர் கலந்துகொண்டனர்.  விழாவுக்கான ஏற்பாடுகளை  திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியும், ரோட்டரி சங்க நிர்வாகியுமான சுபா பிரபு சிறப்பாக செய்திருந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்