மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 23ஆம் தேதி காலை 10:35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது .இந்த விழா மே மாதம் நான்காம் தேதி நிறைவு பெறுகிறது .மே மாதம் 5ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவில் ஏப்ரல் 27ஆம் தேதி வேடர்பறி லீலை வைபவமும், 28ஆம் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை வைபவமும் நடக்கிறது .30ஆம் தேதி இரவு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது .மே 1ஆம் தேதி திக்விஜயமும் இரண்டாம் தேதி காலை 8:35 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடக்கிறது. மே 3ம் தேதி அதிகாலை திருத்தேரோட்டம் நடக்கிறது. நான்காம் தேதி சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது .மே ஐந்தாம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. திருவிழா என்றாலே முக்கியத்துவம் வாய்ந்தது மதுரை மாநகரம் .தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற மதுரையில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இவை அனைத்திலும் கலந்து கொள்வதற்காக உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் ஏராளமான அளவில் மதுரைக்கு வந்து செல்வர் .கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அந்த வருடம் மட்டும் திருவிழா மக்கள் கூட்டத்துடன் நடைபெறவில்லை ஆன்மீக பாரம்பரியம் மாறாமல் இருக்க கோவிலுக்குள் மட்டுமே விழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஊரடங்கு வராமல் இருக்க பக்தர்கள் அனைவரும் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .இந்த முறை கண்டிப்பாக திருவிழா கோலாகலமாக நடைபெற வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள்.
