Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதிகளில் வருகிற 11ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை(10-09-2024) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் பெறும் மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணா நகர், கண்டோன்மென்ட், ஐங்ஷன், காஜாபேட்டை, கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யகொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, சொசைட்டி காலனி, எம்.எம். நகர், தேவதானம், மகாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம், உக்கடை, ஜெகனாதபுரம், திருவெறும்பூர், வள்ளுவர் நகர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளுக்கு 11.09.2024 ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.  12ம் தேதி அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்