Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் 600 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார்  திருவெறும்பூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது 3 வாலிபர்கள்  போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருச்சி காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்த அரவிந்த் (23), கிராப்பட்டியை சேர்ந்த வெற்றிவேல் (23), ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை  சேர்ந்த  சதீஷ்குமார் என தெரியவந்தது. அவர்களிடம் 600 போதை மாத்திரைகள் இருந்தன.  அதன்பேரில்  மூவரையும் பிடித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதுதொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்