Rock Fort Times
Online News

திருச்சி திமுக நிர்வாகிகளுக்கு இடையே மனக்கசப்பா? அமைச்சர் கே.என்.நேரு சொல்வதென்ன?

திருச்சி திமுக நிர்வாகிகளுக்கு இடையே மனக்கசப்பு உள்ளதாகவும், தனித்தனியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், கீழ் மட்ட நிர்வாகிகளுக்கு மூத்த நிர்வாகிகள் உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நேற்று நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக நிர்வாகி ஒருவர் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார். இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேருவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து, நகராட்சி நிர்வாக துறையும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு முகாம்களை நடத்தி வருகின்றோம்.
மேலும், மழைக்காலங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாத வண்ணம் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
திருச்சியை பொறுத்தவரை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்ற அதிருப்தி என்பது அண்ணன், தம்பிக்குள் இருக்கின்ற பிரச்சனை.
குடும்பத்திற்குள் நடக்கின்ற பிரச்சனை போன்றது தான். குடும்பத்திற்குள் மகிழ்ச்சி வருத்தம் என எல்லாமும் இருக்கும், அதுபோல தான். பிரச்சனைகளை நாங்கள் சரி செய்து விடுவோம் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்