பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து சரிவர கணக்கு காட்டாத இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மாற்றம்: திருச்சி எஸ்.பி.அதிரடி…!
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முக்கொம்பு பகுதியில் ஒரு மர்ம கார் நீண்ட நேரம் சுற்றி வருவதாக திருச்சி போலீஸ் சூப்பிரண்டு உதவி எண்ணுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி வருண்குமார் உத்தரவிட்டதன் பேரில், எஸ்பியின் தனிப்படை போலீசார் காரை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்தக் காரில், சோதனையிட்ட போது அதில் 20 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களை கடத்தி வந்த திருச்சி லால்குடியை சேர்ந்த மணிராஜ் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த தங்கமாயன் ஆகிய இருவரை ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மொத்த மதிப்பு ரூ.96,420 என போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, மற்றும் ரொக்க பணம் குறித்து சரிவர கணக்கு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்
ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், தலைமை காவலர் சரவணன், காவலர்கள் சத்தியமூர்த்தி, அருள்முருகன், ரகுபதி
ஆகிய 5 பேரை திருச்சி எஸ்.பி வருண்குமார் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Comments are closed.