Rock Fort Times
Online News

திருச்சியில் தூய்மை பணியின் போது சாக்கடைக்குள் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு…!

திருச்சி மாநகராட்சி 20வது வார்டுக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் அருகே உள்ள மன்னார் பிள்ளை தெருவில்  இன்று(27-08-2024) காலை தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  அப்போது தூய்மை பணியாளர் சந்திரமோகன், தூய்மை பணியில் ஈடுபட்டபோது சாக்கடையில் துப்பாக்கி ஒன்று கிடந்தது.  இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில் காந்தி மார்க்கெட் உதவி ஆய்வாளர் சட்டநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த துப்பாக்கியை கைப்பற்றி பார்த்தபோது அது ஒரிஜினல் துப்பாக்கி தான் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த துப்பாக்கி யாருடையது?, சாக்கடைக்குள் வீசப்பட்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மக்கள் அதிகம் கூடும் காந்தி மார்க்கெட் பகுதியில் துப்பாக்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்