Rock Fort Times
Online News

நத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி…!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது, ஆவிச்சிப்பட்டி. இப்பகுதியில் பூலாமலை அடிவாரத்தில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில் இன்று(25-08-2024) அதிகாலை இந்த பட்டாசு ஆலையில் வெடி தயாரிக்கும் பணியின்போது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் டமார், டமார் என்ற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. மேலும், ஆலையில் தீப்பற்றி எரிந்தது.  இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி  அணைத்தனர்.  இருந்தாலும் இந்த வெடிவிபத்தில் 2 பேர் பலியாகினர்.  நத்தம் போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்