தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சிள்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகர், லிப்ரா புரொடக்க்ஷன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக,
சென்னை அசோக் நகரில் 19-வது அவென்யூவில் உள்ள ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாடு, நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என பாலாஜி என்ற தொழிலதிபரை அணுகி ரூ.16 கோடி மோசடி செய்ததாக ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு தொடரப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 946
Comments are closed.