Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட தமிழக திருக்கோவில்களில் அன்னதான திட்டம் விரிவாக்கம்… * காஞ்சிபுரத்தில் அமைச்சர் ரமேஷ் துவக்கி வைத்தார்..!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் வரும் முக்கியமான 10 திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பசி போக்க நாள் முழுவதும் அன்னதான திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது முக்கியப் பெரிய திருக்கோவில்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு மொத்தம் 10 கோவில்களில் நடைமுறையில் உள்ளது. அதன்படி

• ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில்
• பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,
• திருச்செந்தூர் – சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
• சமயபுரம் – மாரியம்மன் திருக்கோவில்
• திருத்தணி – சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
• இராமேஸ்வரம் – இராமநாதசுவாமி திருக்கோவில்
• திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்
• மதுரை – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
• அழகர்கோவில் – கள்ளழகர் திருக்கோவில்
• மருதமலை – சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமை மற்றும் பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவதால் அவர்களுக்கு அன்னதானம் வழங்க முடியாத சூழல் இருந்து வந்தது. இந்நிலையில், நடைபெற்ற முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகத்தில் உள்ள முக்கியமான 10 திருக்கோவில்களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு கூடுதல் பக்தர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், கூடுதலாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 475 பக்தர்கள் பயன் பெறும் வகையில் தற்போது இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான துவக்க விழா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டு விரிவு படுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்