Rock Fort Times
Online News

‘ஜெயிலர்- 2’ படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை…!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் (அக்டோபர் 15) வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகயுள்ளது. இந்நிலையில், ஜெயிலர்-2 படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்கள், டிஜிட்டல் தளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், படம் வெளியான முப்பது நிமிடங்களில் சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியிடப்படுவதால் கடும் நஷ்டத்தை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்