Rock Fort Times
Online News

திருச்சி எஸ்.பி. புகைப்படத்துடன் “தலைகள் சிதறும்” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் சிக்கினார்…!

திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவரை போலீசார் தேடிவந்த நிலையில்  கடந்த 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தைலமரக் காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் துரை மற்றும் அவருடன் இருந்தவரை பிடிக்க முயன்றபோது, போலீசாரை தாக்க முயன்றுள்ளார். அப்போது அவர், போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.  இந்நிலையில் துரையின் ஆதரவாளர்கள்  சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் “mgr-nagar-official” முகவரியில் இருந்து திருச்சி மாவட்ட எஸ்.பி.  வருண்குமார் மற்றும் அவரது மனைவி புதுக்கோட்டை எஸ்.பி.  புகைப்படத்தை பகிர்ந்து,

அத்துடன் “திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் பதிவேற்றம் செய்திருந்தனர்.  இதனைப் பார்த்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், புத்தூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி (21) என்பவர் தான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது. சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜபாண்டியை தேடிவந்தனர். இந்நிலையில், குழுமணி- உறையூர் சாலையில் உள்ள ராமநாதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த ராஜபாண்டியை போலீசார் பிடிக்க முயன்றபோது, ராஜபாண்டி பட்டாகத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதற்கெல்லாம் அஞ்சாத போலீசார் அவரை மடக்கி பிடித்ததனர். பின்னர்,  அவர் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதுதொடர்பாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில்,  இதுபோன்று பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் நபர்களை பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 94874 64651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்