Rock Fort Times
Online News

ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு 6,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… * ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை..!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 6.199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

19-ம் தேதி( திங்கட்கிழமை) ஆயுதபூஜை, 20-ம் தேதி( செவ்வாய்க்கிழமை) விஜயதசமியையொட்டி
அரசு விடுமுறை நாட்கள் ஆகும். அதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் வருகிறது. இந்த தொடர் விடுமுறைகளை பயன்படுத்தி சிலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக 6,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும். நாளை மறுநாள் (15-ம் தேதி) முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 9.086 சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 15,659 பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வாங்கினால் அதை திரும்ப வசூலித்து ஒப்படைத்து வருகிறோம். பண்டிகை நாட்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும். ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க ஸ்பெஷல் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ரெயில்வே துறையிடம் கேட்டுள்ளோம். தசரா விடுமுறையையொட்டி 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும். காலநிலை பூங்காவில் இருந்து வந்தவாசி, வேலூர், தி.மலை பேருந்துகள் இயக்கப்படும். கும்பகோணம் பேருந்துகள் மறைமலை நகரில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்